மட்டக்களப்பு மாநகர சபையினால் செயற்படுத்தப்படும் வினைத்திறன்மிக்க செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இச் செயற்பாடுகள் இலகுவில் மக்களுக்கு சென்றடையவும், நன்மைபயக்கவும் வழியேற்படும் என மாநகர முதல்வர் தி.சரவணபவான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பிரகாரம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கிடையில் மாநகரசபையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை அதிகரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு  மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே மாநகர முதல்வர் தி.சரவணபவான் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகர சபையினால் செயற்படுத்தப்படும் வினைத்திறன்மிக்க செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இச் செயற்பாடுகள் இலகுவில் மக்களுக்கு சென்றடையவும், நன்மைபயக்கவும் வழியேற்படும்.

இக்கலந்துரையாடலில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர முதன்மை மாநகராக்கும் செயற்திட்டத்திற்கான வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், மாநகர உறுப்பினர்கள், ஊழியர்களினால் ஆக்கபூர்வமான பல கருத்துக்களையும் முன்வைத்தனர்.