புதிய கட்­சியை நான் உரு­வாக்­க­வில்லை மக்­கள் உரு­வாக்­கு­வதை அவ­தா­னிக்­கிறேன்

Published By: Robert

22 Feb, 2016 | 10:34 AM
image

ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியை பிள­வு­ப­டுத்­து­வ­தற்­காக கட்­சியை விட்டு தான் முதலில் வெளியே­ற­வில்லை. கட்­சியின் தோல்­விக்கும் பிள­வு­க­ளுக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே முற்று முழு­வ­து­மான காரணம் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான மஹிந்த ராஜ­பக் ஷ தெரிவித்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் ஊட­கங்­க­ளுக்கு விடுக்­கப்­ப­டு­கின்­ற அச்­சு­றுத்தல் தொடர்பில் ஊட­கங்கள் அமைதி காத்து வரு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த ஆட்­சியின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கையின் போது அரச தொலைக்­காட்சி ஒன்றை முறை­யற்ற விதத்தில் பயன்­படு­த்தி­யமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க பாரிய நிதி மோச­டிகள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வரும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மஹிந்த ராஜபக் ஷ வருகை தந்­தி­ருந்த போதே அங்கு கூடி­யி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளினால் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக் ஷ,

தேசிய அர­சாங்­கத்தின் கீழ் அங்­கத்­துவம் பெறும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினை சேர்ந்த சில உறுப்­பி­னர்கள் இன்று கட்­சியை நான் பிள­வுப்­ப­டுத்­து­வ­தாக தெரிவிக்­கின்­றனர். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பிள­வு­ப­டுத்­து­வ­தற்­காக கட்­சியை விட்டு நான் முதலில் வெளியே­ற­வில்லை. கட்­சியின் தோல்­விக்கும் பிள­வு­க­ளுக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே முற்று முழு­வ­து­மான காரணம்.

இன்று எனது தலை­மைத்­து­வத்தின் கீழ் கட்சி ஒன்றை உரு­வாக்­கு­வது தொடர்பில் பர­வ­லாக பேசப்­ப­டு­வ­தோடு இது தொடர்பில் என் மீது பார­தூ­ர­மான குற்­றச்சாட்டு­களும் சுமத்­தப்­ப­டு­கின்­றன. புதிய கட்­சி­யொன்றை உரு­வாக்­கு­வது தொடர்பில் நான் எவ்­வித செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

நல்­லாட்சி அரசின் செயற்­பா­டுகள் மீது மக்கள் அதிருப்தி கொண்­டுள்ள நிலையில் மக்­களே அதற்­கான அடி­த­்தளத்தை அமைக்­கின்­றனர். அதை நான் அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்றேன். இதற்­கான இறுதி பதிலை மக்­களே வெகு­வி­ரைவில் வழங்­கு­வார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது மக்­க­ளி­னது கட்­சி­யாகும் மக்கள் இருக்கும் இடத்­தி­லேயே கட்­சி­யா­னது இருக்­கின்றது. வெறு­மனே கட்­சியின் பெயர் பதா­கைகள் இருக்கும் இடத்தில் கட்­சி­யில்லை என்ப தனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் தொடர்ச்சி­யாக விடுக்கப்படும் ஊடக அச்சுநுத்தல்கள் தொடர்பில் ஊடகங்கள் அனைத்துமே மௌனம் காக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47