புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் முகமாக பாகிஸ்தானில் எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

கடந்த மே மாதம் 31 ஆம் திகதி பாகிஸ்தானின் ஆளுங் கட்சியின் ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய பிரதமர் இத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவார். அதுவரை இடைக்கால பிரதமர் ஒருவர் செயற்படுவார்.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் பல முக்கிய நபர்கள் இத் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். குறிப்பாக இம்ரான் கான், தற்போதைய பிரதமர் அப்பாஸி மற்றும் அந் நாட்டின் முக்கிய வேட்பாளரான பிலாவால் ஆகியோர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.