அமெரிக்க இராணுவத்தின் ஆறாவது படையாக சகல துறைகளிலும் ரோபக்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந் நாட்டு இராணுவத்துறை தெரிவித்துள்ளதுடன், இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்றும் அறிவித்துள்ளது.

 

இது குறித்து அமெரிக்க இராணுவத்தினர் மேலும் தெரிவிக்கையில்,

மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பை குறைக்க முடியும். அத்துடன் நுட்பமான முறையில் தாக்குதல்களை மேற்கொள்ளவும் முடியும். 

பெண்டகனில் கடந்த பல வருடங்களாக இதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம். அணுஆயுத தாக்குதலை முன்பே கணிக்கும் திறன் கொண்ட இந்த ரோபோக்களை ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் வடிவமைத்து வருகன்றோம். 

அமெரிக்காவின் பெரும்பாலான இராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் குண்டுகளை அகற்றும் நடவடிக்கையின்போதே விபத்துக்குள்ளாகி உயிரிழக்கின்றனர். இந்த குண்டுவெடிப்புக்களை தடுக்கவும், எத்தகைய குண்டுகளையும் எளிதாக செயலிழக்க வைக்கும் ரோபோக்களையும் தற்போது சோதனை செய்து வருகின்றோம். 

இராணூவத்தின் ஐந்து படைகளுடன் ஆறாவது படையாக இந்த ரோபோக்கள் சேர்க்கப்பட உள்ளது. ஆனால் இது எப்படி நடைபெறும் என்று விளக்கமாக கூற முடியாது. இதன் முதற்கட்டமாக அமெரிக்க இராணுவம் இன்னும் சில மாதங்களில் ரோபோக்களை வைத்து சில சோதனைகள் நடத்த இருக்கிறது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ரோபோக்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.