சோமாலியாவிலிருந்து யேமனிற்கு கடல்வழி மூலம் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளில் 46 படகு கவிழ்ந்ததில பலியாகியுள்ளனர் என ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யேமனின் கொந்தளிப்பு மிகுந்த கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் இவர்கள் பலியாகியுள்ளனர் மேலும் 16 பேரிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என ஐஓஎம் அமைப்பு தெரிவித்துள்ளது.

சோமாலியாவின் பொசாசோ துறைமுகத்திலிருந்து யேமனிற்கு புறப்பட்ட படகில் 100 பேர் வரையிருந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் அனைவரும் எத்தியோப்பிய பிரஜைகள் எனவும் ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏடன் வளைகுடாவில் இந்த படகு கவிழ்ந்துள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் பலியானவர்களில் 9 பெண்களும் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்

படகிலிருந்த பலரிடம் உயிர்காக்கும் அங்கிகள் இருக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.