ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று  கூடப்படவுள்ளது. 

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு 7 மணியளவில் இந்த கூட்டம் கூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக புதிய நிர்வாக அதிகாரிகளை நியமித்த பின்னர் நடக்கவுள்ள முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டம் இதுவாகும். 

குறித்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.