(இரோஷா வேலு) 

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்திய பிரஜையொருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் சந்தேகத்திற்கிடமான நபரொருவர் தடுத்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

 குறித்த நபரை பரிசோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து 12 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதன்போது அவரை விமான நிலைய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.  

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விமான நிலைய பொலிஸார் ஆஜர்படுத்தி போது நீதவான் அவரை 22000 ரூபா தண்டப்பணம் விதித்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.  

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.