கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் பெண் ஒருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் ஹபரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கதவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

26 வயதுடைய குறித்த பெண் காத்தான்குடி பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும், குழந்தை மற்றும் தாய் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.