தென் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவர் பொதி செய்யப்பட்டு குளிரூட்டப்பட்டு பேணப்பட்ட மாதுளம் பழமொன்றை உண்டதால் கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் 'ஹெப்பாரிரிஸ் ஏ' வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

மாதுளம் பழங்களை உண்பதால் இவ்வாறு நோய் தோற்று ஏற்படுவது அபூர்வமாக இடம்பெறும் சம்பவம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிரியோட்டிவ் கோர்மெட் நிறுவனத்தால் எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த மாதுளம்பழம் பொது செய்யப்பட்டு குளிரூட்டப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டிருந்தது. 

இந் நிலையில் மேற்படி உற்பத்திகளை உண்டதால் நோய்  தொற்றுக்குள்ளாகி 24 பேர் வரை மருத்துவ சிகிச்சை பெற நேர்ந்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.