ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் விதித்துள்ள தடைகள் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடடியவை  எனவும் அவற்றை அகற்றுவதே அனைவரதும் அக்கறையாகவுள்ளதாகவும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்தார்.

ஆஸ்திரியாவுக்கு விஜயம் செய்துள்ள அவர், அங்கிருந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ரஷ்யா உக்ரேனிய, கிறிமியா பிராந்தியத்தை தன்னுடன் இணைத்து கொண்டதையடுத்து 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்திருந்த நிலையிலும் ரஷ்யா ஸ்திரமான வளர்ச்சி நிலையிலுள்ளதாக அவர் கூறினார்.

இந் நிகழ்வில் ஆஸ்திரிய அதிபர் செபஸ்ரியன் குர்ஸ் உரையாற்றுகையில்,

தனது நாடு ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்குமிடையிலான உறவுகளுக்கு பாலமாக செயற்பட விரும்புவதாக கூறினார்.

கடந்த ஒரு வருட காலப் பகுதியில் புட்டின் மேற்கு ஐரோப்பாவுக்கு மேற்கொண்ட முதலாவது விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.