மாவனல்லை – ஹெம்மாதகமை வீதி, அலுதெனியவில்  ட்ராக்டர் ஒன்று  விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த  8 மாணவர்கள் காயமடைந்து  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வி நடவடிக்கை தொடர்பான விடயமொன்றுக்காக மாணவர்களை ஏற்றிச்சென்று  திரும்பிக் கொண்டிருக்கையிலேயே  ட்ராக்டரின் பின்பகுதி  கழன்று வேறாகியதில் அதில் பயணம் செய்த 11 மாணவர்களும் ட்ராக்டரிலிருந்து வீசப்பட்டுள்ளனர்.

இவர்களில் காயமடைந்த 8 மாணவர்கள் மாவனல்லை , ஹெம்மாதகமை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 3 மாணவர்களும் சிறுகாயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு வைத்தியசாலை யிலிருந்து திரும்பியுள்ளனர்.