இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேரமுடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 84 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று 5 ஆம் திகதி மேற்கிந்தியாவின் போட் ஒப் ஸ்பெயினில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில்வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 84 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்ப்பாக பவல் 38 ஓட்டங்களையும் கோப் 44 ஓட்டங்களையும் சேஸி 38 ஓட்டங்களையும் கோல்டர் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

ஷேன் டாவ்ரிச் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும், பிஸ்கோ ஓட்டமெதனையும் பெறாமல் ஆடுகளத்திலுள்ளனர்.

இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்களையும், சுரங்க லக்மால், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.