ஆசிய பசுபிக் பிராந்திய அரசாங்கங்களுக்கிடையிலான கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான குழுவில் அங்கம் வகிக்கும் 4 நாடுகளில் ஒன்றாக இலங்கை  தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் 7ஆவது கூட்டத்தொடர் பாரீஸ் நகரில் இடம்பெற்றது. இதன்போதே வாக்கெடுப்பு மூலம் இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 

அதன்படி 2018-2022 வரையான காலப்பகுதிக்கு மேற்படி குழுவில் இலங்கை அங்கத்துவம் வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.