முக்கிய பொறுப்பு ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் உண்டு - அனுரகுமார

Published By: Vishnu

06 Jun, 2018 | 05:48 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பாரிய நிதி மோசடி குற்றவாளிகளான ஜாலிய விக்ரமசூரிய, உதயங்க வீரதுங்க மற்றும் அர்ஜுன மஹேந்திரன் ஆகிய மூவரையும்  இலங்கைக்கு வரவழைக்கும் முக்கிய பொறுப்பு பிரதமருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமே உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதான மூன்று நபர்கள் இன்று நாட்டினை விட்டு தப்பித்து வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 

2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையில் அமெரிக்கவுக்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட ஜாலிய விக்ரமசூரிய, 2006 தொடக்கம்  2015 ஆம் ஆண்டு வரையில் ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட உதயங்க வீரதுங்க மற்றும் 2015 தொடக்கம் 2016 ஜூன் மாதம் வரையில் மத்திய வங்கி ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மஹேந்திரன் ஆகிய மூவருமே இவ்வாறு வெளிநாடுகளில் உள்ளனர். 

உதயங்க வீரதுங்க மிக் விமானம் கொள்வனவு குறித்த ஊழலில் கைது செய்ய நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்தை விற்க நடவடிக்கை எடுத்த குற்றத்தின் பெயரில் கைது செய்ய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அர்ஜுன மஹேந்திரன் மத்திய வங்கியில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் பணத்தை கொள்ளையடிக்க அனுமதி வழங்கியமை என்ற காரணிகளினால் அவர்களை கைது செய்ய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் குறித்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? 

ஜாலிய விக்ரமசூரிய, உதயங்க வீரதுங்க  ஆகிய இருவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய தொடர்புகளை வைத்துகொண்ட நபர்கள், அர்ஜுன மஹேந்திரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர். 

ஆகவே இவர்கள் மூவர் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டின்  பொறுப்புமிக்க பிரஜைகள் என்ற வகையில் இவர்களை நாட்டிற்கு கொண்டுவந்து நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47