சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு : வனத்தில் இளைஞனுடன் உல்லாசம்

Published By: Digital Desk 7

06 Jun, 2018 | 04:46 PM
image

(இரோஷா வேலு) 

புத்தளம் பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் காதலுடன் உல்லாசமாக இருந்த சிறுமி மற்றும் காதலனை புத்தளம் பொலிஸார் கைது செய்து சிறுமியை வைத்திய பரிசோதனைக்குட்படுத்தியுள்ளதோடு, காதலனை இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவிக்கையில், 

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மானவெரிய பிரதேசத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமியொருவர் 20 இளைஞருடன் கடந்த சில மாதங்களாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதியளவில் குறித்த சிறுமி காதலனுடன் அச்சிறுமியின் வீட்டுக்கு பின்னாலுள்ள வனப்பகுதியில் வைத்து உடலுறவில் ஈடுபட்டுள்ளார். 

கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் குறித்து சிறுமி நண்பியொருவருடன் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் இவ்விடயம் குறித்து பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகளை மேம்படுத்தும் அதிகாரிகளுக்கு  அயலவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந் நிலையிலேயே இவ்விடயம் குறித்த அறிந்து கொண்ட சிறுமியின் தாயாரால் நேற்று  பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டு காதலன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதன்போது புத்தளம் மானாவெரிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரொருவரை பொலிஸார் கைது செய்ததோடு  குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்களின் காதல் குறித்து முன்னமே அறிந்துகொண்ட சிறுமியின் தயாரால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்துள்ள நிலையிலும் தாயார் வீட்டிலில்லாத சம்பவங்களில் இருவரும் தனித்து இருந்து வந்துள்ளதாகவும் அயலவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.  

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே குறித்த இருவரும் சிறுமியின் வீட்டுக்கு பின்னாலுள்ள வனப்பகுதியில் உல்லாசமாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் பொலிஸில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த  இளைஞர் கைதுசெய்யப்பட்டு இன்று புத்தளம் நீதவான் நீதின்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது நீதவான் அவரை விளக்கமறிலில் வைக்க உத்தரவிட்டதோடு, குறித்த சிறுமியையும் வைத்திய பரிசோதனைகளுக்கு அனுப்ப உத்தரவிட்டார். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27