(இராஜதுரை ஹஷான், கே.லாவண்யா)

ஆசிய வலயத்தில் சமாதானத்தை மேன்படுத்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு விரிவுபடுத்தும் பன்னாட்டு அமைப்பில் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளுமாறு சீனா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

ஆசியாவில் இடை செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையினை கட்டியெழுப்புவதற்கான கட்டங்கள் தொடர்பான மாநாட்டில் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட  26 ஆசிய நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. 

அதன் தலைமை பொறுப்பு தற்போது சீனா வசம் உள்ளது. சீனாவினால் இலங்கைக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பெயரில் குறித்த மாநாட்டின் அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கை விரைவில் குறித்த பன்னாட்டு அமைப்பில் அங்கத்துவம் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.