"உடன்பாட்டை மீறியமையால் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்"

Published By: Vishnu

06 Jun, 2018 | 03:15 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

ஐக்கிய தேசியக் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பிரதி சபாநாயகர் பதவியையும் பகிர்ந்துகொள்வதாக ஏற்கனவே உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. எனினும் பிரதி சபாநாயகர் பதவியையும் ஐ.தே.க. தற்போது பெற்றுள்து. எனவே அக்கட்சி பிரதான உடன்பாட்டினை மீறியுள்ளமையினால் சு.க. உடனடியாக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகயைிலேய அவர் மேற்கண்டவாறு கூறினார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் உடன்பாடொன்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சகல நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குவதும் வடக்கில் வேறு எந்தவொரு தமிழ்த் தலைவர்களையும் வளர விடாது தடுப்பதுமே அந்த உடன்பாடாகும்.

அதனால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை பிரதி சபாநாயகராக முன்மொழிவதற்கு ஆயத்தமானபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தது. பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் இக்காரணத்தை அடிப்படையாக கொண்டே.

மேலும் அரசாங்கத்தில் தற்போதைக்கு அங்கம் வகிக்கும் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அடுத்துவரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களை நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எனக் கருதப்போவதில்லை.  

பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய 118 பேர்கள் அடங்கிய பட்டியல் பற்றிப் பேசுகின்றனர். அவ்வாறான பட்டியல் எங்குள்ளது?, நல்லாட்சி அரசாங்கம் ஈட்டிய பெரும் வெற்றியாக தகவலறியும் சட்டம் பற்றி பேசினர். எனினும் அது சட்டமாக உள்ளதா என ஆய்வுசெய்து பார்க்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47