( எம்.எம். சில்வெஸ்டர்)

இலங்கை  கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள சுப்பர் ப்ரொவென்ஷியல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் 10 அம் திகதி நடைபெறவுள்ளது.

கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை ஆகிய நான்கு அணிகள் பங்குகொண்ட 50 ஓவர்களைக்கொண்ட இப்போட்டித் தொடரின் லீக் சுற்றில் முதலிரு இடங்களை பிடித்த காலி மற்றும் கொழும்பு ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

கடந்த மாதம் 20 ஆம் திகதியன்று நடத்தப்படவிருந்த இந்த இறுதிப்போட்டி தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டிருந்ததுடன், பகலிரவுப் போட்டியாகவும் ஏற்பாடாகியருந்தது.

இந்நிலையில் அணிக்கு 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுப்பர் ப்ரொவென்ஷியல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதியன்று காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகும்.