தென்னாபிரிக்காவின் போட்ஸ்வனா நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் "2018 எல்.ஏ" என்ற விண்கல் ஒன்று 61,155 கிலோமீற்றர் வேகத்தில் வீழ்ந்து வெடித்து சிதறியுள்ளது.

2018 எல்.ஏ என்ற இந்த விண்கல்லானது வருட ஆரம்பத்தில் 384,600 கிலோமீற்றர் தூரத்தில் இருந்துள்ளது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது பூமியை நோக்கி நகர ஆரம்பித்தது. இவ்வாறு அந்த விண்கல் பூமியை நோக்கி வரும்போது அதன் அளவும் குறைந்து கொண்டே வந்துள்ளது. 

இந் நிலையில் இந்த வாரம் அது பூமியில் மோதும் என்று தெரிவித்த நாசா விஞ்ஞானிகள் பூமியில் எநத இடத்தில் விழும் என்பதை கணித்து கூறவில்லை. 

இந்த நிலையில் தென்னாபிரிக்காவின் போட்ஸ்வனா நகரத்திற்கு அருகில் இருக்கும் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை சரியாக 61,155 கிலோமீற்றர் வேகத்தில் இந்த விண்கல் விழுந்துள்ளதுடன் நொடிக்கு 17 கிலோ மீற்றர் தூரம் வரை பயணம் செய்துள்ளது. 

இது பூமியில் நுழைந்த உடன் தீ பற்றியுள்ளது. இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. பொருட்கள் எதுவும் சேதமடையவில்லை. விண்கல் விழுந்த பகுதியை தற்போது நாசா ஆய்வு செய்து வருகிறது.