குவாட்டமாலாவில் உள்ள பியூகோ எரிமலைக் குமுறலில் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெவரிக்கின்றன.

மேற்படி எரிமலைக் குமுறலால் வெளிப்பட்ட உருகிய பாறைக் குழம்பு, மண்சக்தி மற்றும் சாம்பல் என்பன காரணமாக பல கிராமங்கள் அழிவடைந்துள்ளன.

மேலும் இந்த சம்பவம் காரணமாக 300 பேர் காயமடைந்துள்ளனர். 2000 பேர் குறித்த பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் 192 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந் நிலையில் காணாமல்போனோரை தேடும் நடவடிக்கையில் தீயணைப்பு படைவீரர்களும் படையினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் மேற்படி குமுறல் காரணமாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.