"தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அடித்தளமிட்ட முதற் தற்கொடையாளி பொன். சிவகுமாரன்"

Published By: Digital Desk 7

06 Jun, 2018 | 01:00 PM
image

"அல்பிரேட் துரையப்பா முதல் இன்று வரை பல துரோக கும்பல்கள் எங்கள் இனத்தின் மக்களை நசுக்கிவருகின்றனர். இவ்வாறான அடக்குமுறைக்கு எதிராக முதலாவதாக தற்துணிவாக எதிர்த்து போரடி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அடித்தளமிட்ட முதற் தற்கொடையாளி பொன். சிவகுமாரன். எனவே தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்ற இன்றுள்ள துரோக கூட்டங்கள் இனத்திற்காக இப்படிப்பட்ட புனிதர்கள் செய்த தியாகங்கள் போராட்டங்களை படித்துப் பார்க்கவேண்டும்." என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.  

நேற்று மாலை மட்டக்களப்பு தாமரைக்கேணியிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற  தமிழ் தேசிய விடுதலைக்காக தன்னைத் தியாகம் செய்த பொன். சிவகுமாரின் 44 ஆவது நினைவேந்தலில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தர்மலிங்கம் சுரேஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நினைவேந்தலில் தர்மலிங்கம் சுரேஸ்,

"தமிழ் மக்கள் மீது முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராக தற்துணிவாக பல போராட்டங்கள் நடாத்தி தமிழினத்திற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்த ஒரு மாவீரன்

1970 சிறிமாவோ பண்டார நாயக்காவின் அரசினால்  கல்வி தராதரம் பார்க்கப்பட்டு தமிழ் மக்களுக்கு மிகவும் ஒரு புறம்பான கல்வி தரம் நடைபெற்றது அது தமிழ் மக்கள் மீது முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை அந்த நிலைமையில் பொன்.சிவகுமாரன் தனது முழு எதிர்பபையும் வெளிப்படுத்தி கல்விக்காக உண்ணதமான போராட்டத்தை மேற்கொண்டார்.

அப்போது பொலிஸார் பல்வேறு இன்னல்களை கொடுத்தும் அதனை முறியடித்து பல தற் துணிவான போராட்டங்களை செய்து தமிழ்  மக்களின் விடியலுக்காக  ஆயுதம் ஏந்தியவர். இதன்போது பல தமிழ் துரோக கும்பல்கள் ஆரம்பத்தில் இருந்தே சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மழுங்கடிக்கின்ற பல செயற்பாடுகளில் ஈடுபட்டபோது அவ்வப்போது பல எதிர்ப்புக்களையும் இந்த அரசுக்கு தலையிடியை கொடுத்துவந்தார்.

இந்த நிலையில் பொன். சிவகுமாரன் பல இடங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பல துன்பங்களை அனுபவித்தும் கூட விடுதலையாகிய பின்பு இனத்திற்காக தியாகங்களை செய்ததுமட்டுமன்றி பொலிஸார் கைது செய்தபோது தன்னிடம் இருந்து எந்த உண்மையும் எடுக்ககூடாது என சயனைற் அருந்தி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

அப்படிப்பட்ட ஒரு பெரும் மகாணை நினைவு கூறுவது இன்றியமையாததொன்று. எனவே அவரின் வரலாறு என்பது மிகவும் முக்கியமானது அண்ணன் திலீபன் போல சிவகுமாரன் எந்த நிலையிலும் சோரம் போகாத கொள்கையைக் கொண்டவர். அவரின் தியாகங்களை இன்றைய இளைஞர்கள் படிக்கவேண்டும்." என்றார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55