கணவர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இருவருக்குமிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் உயிரிழந்த கணவரின் வயது 47 எனவும் மனைவியின் வயது 46 என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.