வட இத்தாலியிலுள்ள பியசென்ஸா புகையிரத நிலையத்தில் பெண்ணொருவர் புகையிரதத்தால் மோதுண்டு தண்டவாளத்தில் உயிருக்கா போராடிக் கொண்டிருக்கையில், அந்தக் காட்சியை தனது கையடக்கத் தொலைபேசி மூலம் செல்பி எடுப்பதில் ஈடுபட்ட ஒருவர் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

மேற்படி நபரின் செயற்பாட்டை அந்தப் புகையிரத நிலையத்திலிருந்தவர் படம்பிடித்து வெளியிட்டதையடுத்து அவரது செயல் குறித்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

புகையிரதத்தால் மோதுண்டு படுகாயமடைந்த கனேடிய பிரஜையான குறிப்பிட்ட பெண் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு ‍செல்லப்பட்டதாகவும் அவரது கால்களில் ஒன்று இந்த விபத்தில் படுகாயமடைந்து உருக்குலைந்துள்ளதால் அதனை வெட்டி அகற்ற வேண்டியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.