அமெரிக்காவின் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடும் ஈழ தமிழர்கள்

Published By: Vishnu

06 Jun, 2018 | 08:41 AM
image

அமெ­ரிக்­காவின் மேரிலன்ட் மாகா­ணத்தின் இரண்டு முக்­கிய பத­வி­க­ளுக்கு, உடன் பிறந்­த­வர்­க­ளான இரண்டு தமி­ழர்கள் போட்­டி­யி­டு­வ­தாக, பால்­ரிமோர் மகசின் என்ற ஊடகம் தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

மேரிலன்ட் மாகாண ஆளுநர் பத­விக்கு, கிரி­சாந்தி விக்­ன­ராஜா என்ற பெண் போட்­டி­யி­டு­கிறார். அவ­ரது சகோ­த­ர­ரான திரு எனப்­படும் திரு­வேந்­திரன், அதே மாகா­ணத்தின், பால்­ரிமோர் நகர அரச சட்­ட­வாளர் பத­விக்குப் போட்­டி­யி­டு­கிறார்.

கிரி­சாந்தி முன்னர், வெள்ளை மாளி­கையில் மிச்சேல் ஒபா­மாவின் கொள்கை பணிப்­பா­ள­ராக இருந்­தவர்.

கிரி­சாந்­தியும்  அவ­ரது அண்ணன் திருவும், குழந்­தை­க­ளாக இருந்தபோது, அவ­ரது பெற்றோர், இலங்­கை­யி­லி­ருந்து போரினால் இடம்­பெ­யர்ந்து, பால்­ரிமோர் நகரில் குடி­யே­றினர்.

இவர்­களின் பெற்றோர் பால்­ரிமோர் நகர  பாட­சா­லையில் ஆசி­ரி­யர்­க­ளாக பணி­யாற்­றினர்.

ஹவார்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்டம் பயின்ற திரு, ‘ஹவார்ட் லோ ரிவியூ’ இத ழின் ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்­றினார்.

அவ­ரது சகோ­த­ரி­யான கிரி­சாந்தி யேல் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அர­சியல் விஞ்­ஞானம் படித்தார். இவர்கள் இருவரும் இப்போது மேரி லன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கியமான பதவிகளுக்காக ஜனநாயக கட்சி சார் பில் போட்டியிடுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44