மேல்­மா­காண தோட்­டப்­புற  பாடசா­லை­களில் தமிழ் பட்­ட­தா­ரி­களை நிய­மிக்கும் வகையில் "பின்­தங்­கிய பிரி­வினர்" என்ற அடிப்­ப­டையில் புதிய அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை தாக்கல் செய்­யு­மாறு தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவரும் அமைச்­ச­ரு­மான மனோகணே­ச­னிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யோசனை தெரிவித்துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம்  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை நடை­பெற்­றது. இதன்­போது தோட்­டப்­புற பாட­சா­லை­க­ளுக்­கானபட்­ட­தாரி  ஆசி­ரியர் நிய­ம­னத்தில்   இழைக்­கப்­பட்­டுள்ள அநீதி தொடர்பில்  அமைச்சர் மனோ கணேசன்    ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்தார். 

இத­னை­ய­டுத்தே தோட்­டப்­பு­றங்­க­ளி­லுள்ள  தமிழ் பட்­ட­தா­ரி­களை  இணைக்கும் வகையில் "பின்­தங்­கிய பிரி­வினர்" என்ற அடிப்­ப­டையில் புதிய அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை தாக்கல் செய்­யு­மாறு ஜனா­தி­பதி கேட்­டுள்ளார். 

மேல்­மா­கா­ணத்­தி­லுள்ள பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரியர்  நிய­மனம்  நாளை  வியா­ழக்­கி­ழமை  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  தலைமையில்  தாமரை தடாக மண்­ட­பத்தில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.    இதில்  தோட்­டப்­புற  பாட­சா­லை­க­ளுக்கு 86 பட்­ட­தாரி ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். இதில்  10 தமி­ழர்­க­ளுக்கு மட்­டுமே நிய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது. 10 சிங்­கள ஆசி­ரி­யர்­க­ளா­கவும் ஏனை­ய­வர்கள்  முஸ்லிம் ஆசி­ரி­யர்­க­ளா­கவும் நிய­மனம் பெற­வுள்­ளனர். 

மேல் மாகா­ணத்தில் களுத்­துறை மாவட்ட, அவி­சா­வளை உள்­வரும் ஹோமா­கமை கல்வி வல­யத்தை சார்ந்த தோட்ட தமிழ் பாடசாலைகளுக்கு தோட்­டங்­களை சாராத ஆசி­ரி­யர்கள் நியமிக்கப்படுவது பொருத்­த­மா­ன­தல்ல  என்று  அமைச்சர் மனோ கணேசன் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த கால வர­லா­று­களை எடுத்து பார்க்கும் போது, இப்­படி நியமனம் பெறு­கின்ற சகோ­தர இன, ஆசி­ரி­யர்கள், நிய­மன விதி­களை மீறி, அர­சியல் செல்­வாக்கை பயன்­ப­டுத்தி இட­மாற்றம் பெற்று சென்று விடு­கி­றார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிய­மிக்­கப்­பட்ட பாடசாலைகளில் பணி புரி­யா­ததால், இந்த பாட­சா­லை­களின் கல்வித் தரம் குன்­று­கி­றது. இது ஒரு பின்­தங்­கிய இனத்­துக்கு காட்­டப்­படும் அநீதியாகும்.

மேலும் ஆசி­ரிய நிய­ம­னங்­க­ளுக்­காக நடத்­தப்­படும் பரீட்­சை­களும், நேர்­முக தேர்­வு­களும் இன்­னமும் வெளிப்­ப­டை­யாக நடை­பெற வேண்டும். இளம் தமிழ் மாண­வர்­க­ளது, மொழி, இன கலாசாரத்துக்கும் உகந்­த­வர்­க­ளையே தோட்ட பாட­சா­லை­களில் ஆசிரியர்களாக நிய­மிக்க வேண்டும். 

கடந்த காலங்­களில் போல் அல்­லாமல் இன்று மலை­யக பகு­தி­களில் பட்­ட­தா­ரி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து உள்­ள­தையும் இவர்கள் தோட்ட பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளாக நிய­மிக்­கப்­பட முடியும் எனவும் அமைச்சர் மனோ ஜனா­தி­ப­தி­யிடம் இதன்­போது எடுத்­துக்­கூ­றினார். 

தோட்­டப்­புற பாட­சா­லை­களில் கற்கும் பிள்­ளைகள் மற்றும் இவர்களது பெற்றோர் சமூக, பொரு­ளா­தார மட்­டங்­களில் தேசிய மட்டங்களை விட பின் தங்கி இருக்­கின்ற கார­ணத்தால் இந்த விசேட சலுகை ஒதுக்­கீடு அவ­சி­ய­மா­கி­றது என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

இவற்றை செவி­ம­டுத்த ஜனா­தி­பதி தோட்ட பாட­சாலை ஆசி­ரியர் நியமனம் தொடர்­பாக, "பின்­தங்­கிய பிரி­வினர்" என்ற அடிப்­ப­டையில் விசேட அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்றை சமர்­பிக்­கும்­படி அமைச்சர் மனோ­விடம் தெரி­வித்­துள்ளார்.