(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பிரதி சபாநாயகராக என்னை தெரிவு செய்தமைக்கு அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். என்னால் முடியுமான அளவுக்கு நீதியான முறையில் எனது சேவையை முன்னெடுப்பேன் என புதிய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பிரதி சபாநாயகராக என்னை தெரிவு செய்தமைக்கு நான் அனைத்து கட்சியினருக்கு நன்றி கூறுகின்றேன். இந்த சந்தர்ப்பத்தில என்னை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்த மொனராகலை மக்களை நான் மறக்க மாட்டேன். அத்துடன் என்னுடன் போட்டியிட்ட சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே மிகவும் திறமையானவராவார். அத்துடன் முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பெரும் சேவைகளை பாராளுமன்றத்திற்கு செய்துள்ளார். ஆகவே அவரையும் நான் பாராட்டுகின்றேன்.

ஆகவே  என்னால் முடியுமான அளவுக்கு நீதியான முறையில் எனது சேவையை முன்னெடுப்பேன் என்றார்.