ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெற்றது.

இந்நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இந்நிலையில் பாராளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளையும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே 53 வாக்குகளையும் பெற்றனர்.

இதையடுத்து 44 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி இலங்கை பாராளுமன்றத்தின் 29 ஆவது பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்.