விஜய் அண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் கொலைகாரன் என்ற அடுத்த படத்திற்கான பெஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தன்னுடைய படத்திற்கு எதிர்மறையான தலைப்புகளை தெரிவு செய்து வைக்கும் விஜய் அண்டனியின் சென்டிமெண்ட் கொலைகாரனிலும் தொடர்கிறது. இதில் இரும்புதிரைக்கு பிறகு நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார்.

காளி படத்தைத் தொடர்ந்து மூடர் கூடம் புகழ் இயக்குநர் நவீன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும், திருடன் என்று பெயரிடப்பட்ட ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் விஜய் அண்டனி.

ஆனால் இந்த படங்களை எல்லாம் ஒரங்கட்டிவிட்டு, தன்னுடைய நண்பர்கள் தயாரித்து இயக்கும் கொலை காரன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து உதவியிருக்கிறார் விஜய் அண்டனி.

இவர் தற்போது திமிரு பிடிச்சவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கொலை காரன் படம் வெளியாகும் என்று விஜய் அண்டனி தெரிவித்திருக்கிறார்.

கொலை காரன் பெஸ்ட் லுக்கில் அர்ஜுன் வில்லனாகவும் நடிப்பதால் அவருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. ஏனெனில் வழக்கமாக விஜய் அண்டனி நடிக்கும் படத்தின் பெஸ்ட் லுக்கில் அவருடைய கெட்டப் மட்டுமே இடம்பெற்றிருக்கும் என்கிறார்கள் திரையுலகினர்.