(க.கமலநாதன்)

காணி-பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டால் நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும் அதேபோல் ஜனாதிபதியின் அரசியல் பயணத்திற்கே அது முற்றுப்புள்ளி வைத்துவிடும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதில் எவ்வித தவறும் இல்லையென அண்மையில் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.