பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25 ஆம் திகதி  நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் மகன் மற்றும் மகள் போட்டியிடவுள்ளனர்.

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான  பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ மற்றும் மகள் ஆசிபா பூட்டோ ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

அந்த வகையில் பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது அவர் லர்கானா என்.ஏ-200 மற்றும் .ஏ-246 ஆகிய தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.

பெனாசிரின் மகள் ஆசியா பி.எஸ்.-10 ரத்தோ- டாரோ தொகுதியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.