தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தியாகியான பொன். சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலையின் முன்பாக நேற்று இடம்பெற்றது.
இதன்போது பொன். சிவகுமாரனுக்கு முன்பாக அவரது சகோதரி சிவகுமாரி சுடர் ஏற்றின அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அங்கிருந்தவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.