முதல் காலாண்டில் பாலியல் நோயினால் 9 மரணங்கள்

Published By: Daya

05 Jun, 2018 | 01:40 PM
image

(நா.தினுஷா) 

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி தொற்றால் 2933 நபர்களும் எய்ட்ஸ் நோயால் 723 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதுடன் எய்ட்ஸ் நோயினால் 09 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த வருடம் இறுதியில எச். ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்வர்களாக 10 ஆயிரத்துக்கு அதிகமான நபர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். இதேவேளை இவ்வருடத்தின் முதல் காலாண்டு பகுதியினையும் (ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில்) கடந்தவருடத்தின் காலாண்டு பகுதியினையும் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தை விட அதிகமாக கணக்கிடப்பட்டுள்ளதாக அப்பிரிவு அறிவித்துள்ளது.

தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள இவ்வருடத்துக்கான காலாண்டு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2018 ஆம் ஆண்டிற்கான முதல் மூன்று மாதங்களில் எச். ஐ .வி மற்றும் எயிட்ஸ் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்களின் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. இவ் வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி நோயினால் மொத்தமாக 3ஆயிரத்து 656 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தொகை கடந்தவருடத்திலும் பார்க்க சற்று அதிகமாகும். 

இவ்வருடத்தில் இந்நோயுடன் தொடர்புபட்ட வகையில் 9 மரணங்களும் சம்பவித்துள்ளன. எயிட்ஸ் தொற்றினால் 1939 ஆண்களும் 994 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் எயிட்ஸ் நோயினால் 510 ஆணகளும் 213 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த வருடத்தில் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் 2:1 என்ற விகிதத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று 125 வெளிநாட்டவர்களும் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கபட்டவர்களாக இனங்காணப்பட்டிருந்தனர். 

மேலும் இலங்கையில் பரவும் பாலியல் நோய்களுடன் தொடர்புப்பட்ட எச். ஐ.வி மற்றும் எயிட்ஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தபட்டு வருவதாகவும் விழிபுணர்வு நடவடிக்கைகளும் அமுல்படுத்தபடுவதாகவும் பாலியல் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.      

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17