பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். 

பங்களாதேஷ் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்த போட்டியின்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசிம் அக்ரமின் 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வக்கார் யூனிஸ் கேக் வெட்டியுள்ளார்.

‘வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். புனிதமிக்க ரமழான் மாதத்தையும், நோன்பை கடைப்பிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும் மன்னியுங்கள்’ என வக்கார் யூனிஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புனித ரமழான் மாதத்தில் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், வக்கார் யூனிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.