வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

 53வயதான  துரைச்சாமி திருநாவுக்கரசு  இன்று  காலை மோட்டார் சைக்கிளில் தொழிலுக்குச் சென்ற போது வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த மோட்டார் சைக்கிளில் சென்ற பொன்னம்பலம் ஜெயக்குமார் 48வயதுடையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.