இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியதுடன் இன்று காலை 7 மணியவில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஒப்புகொடுக்கப்பட்ட திருவிழா திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தது.

இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் இரவு முழுவதும் புனித அந்தோனியார் திருச் சுரூபத்திற்கு மலர் மாலைகளைச் செலுத்தி வழிபட்டமை குறிப்பிடத்தக்கது.