அப்பிள் நிறுவனம் அறிவித்த முக்கிய அம்சங்கள் !

Published By: Priyatharshan

05 Jun, 2018 | 11:16 AM
image

அப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐ.ஓ.எஸ். 12 முதல் வொட்ச் ஓ.எஸ்., டி.வி. ஓ.எஸ், மெக் ஓ.எஸ். என அப்பிள் சாதனங்களுக்கான இயங்குதளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு இயங்குதளத்திலும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்ட்வேர் சார்ந்த எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை.

சிரி சேவையை மேம்படுத்தியிருக்கும் அப்பிள், அக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஏ.ஆர்.கிட் போன்றவற்றை ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் இணைத்திருக்கிறது.

இத்துடன் மெக் மற்றும் அப்பிள் வொட்ச் சாதனங்களை முன்பை விட மிக எளிமையாக இயக்க வழி செய்யும் அம்சங்களை புதிய இயங்குதளங்கள் கொண்டிருக்கின்றன.

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து இருப்பதை அப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12 தளத்தின் புதிய அம்சம் மூலம் தெரிவித்திருக்கிறது. டு நொட் டிஸ்டர்ப் (DND), ஸ்கிரீன்டைம் ஒப் உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் பயன்பாட்டை டிராக் செய்து தகவல்களை மிக துல்லியமாக வழங்குகிறது. 

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பயன்பாடு குறித்த தகவல்களை பார்த்து, அதற்கு ஏற்ப செட்டிங்களை மாற்றியமைக்க முடியும். இதேபோன்று அனைவரும் தங்களின் பயன்பாட்டை குறைக்க புதிய செட்டிங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும்.

அப்பிள் நிறுவனத்தின் அனிமோஜி அம்சத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று பேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கோல்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கோல்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் பேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அப்பிள் வொட்ச் கொண்டு ஓடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.

அப்பிள் வொய்ஸ் அசிஸ்டன்ட் சேவை சிறப்பாக இருந்தாலும் அதிக வசதிகளை வழங்குவதில் அமேசானின் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இரு சேவைகளும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வடிவில் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. 

2018 டெவலப்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் சிரி  ஷொர்ட்கட்களை அறிமுகம் செய்தது. இதைக்கொண்டு சில செயலிகளில் குறிப்பிட்ட கொமன்டுகளை உருவாக்க முடியும். இத்துடன் உங்களின் அன்றாட பயன்பாட்டை வைத்து சிரி இனி உங்களுக்கு பயன்தரும் பரிந்துரைகளை வழங்கும்.

ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தின் முதல் அறிவிப்பாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி இருந்தது. ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் டிஜிட்டல் புகைப்படங்களை நிஜ உலகில் பிரதிபலித்து விசேஷ ஹெட்போன்கள் மூலம் அவற்றை போன்களில் பார்க்க வழி செய்கின்றன. போக்கிமான் கோ அல்லது ஃபில்ட்டர்கள் மற்றும் லென்ஸ்கள் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டியின் பிரபல கேம் மற்றும் செயலிகளாக இருந்தன.

ஒரு ஆண்டுக்கு முன் அப்பிள் டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவனம் டெவலப்பர்களுக்காக ஏஆர் கிட் அறிமுகம் செய்தது. இந்த கிட் பயன்படுத்தி டெவலப்பர்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிக்களை உருவாக்க முடியும். மேலும் வால்வ் நிறுவனத்துடன் இணைந்து விர்ச்சுவல் ரியாலிட்டி தளத்தை டெஸ்க்டொப் மெக் சாதனங்களுக்கு கொண்டு வரவுள்ளதாக அப்பிள் அறிவித்து இருந்தது. 

இந்த ஆண்டு அப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தளத்துக்கென USDZ எனும் புதிய போர்மெட் அறிமுகம் செய்துள்ளது. இந்த போர்மேட்டை பயன்படுத்தி பல்வேறு வசதிகளை வழங்க அப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இத்துடன் அப்பிள் நிறுவனம் ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்து, அதில் செய்யக்கூடியவற்றை நிகழ்ச்சியின் மேடையிலேயே நிகழ்த்தி காண்பித்தது. விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்துக்கான சந்தை வரும் ஆண்டுகளில் பெருமளவு வளர்ச்சி பெறவிருக்கிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் சுமார் 2.2 கோடி விஆர் மற்றும் ஏஆர் ஹெட்செட்களை வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26