சமூக ஊடகங்களுக்கு பிரத்தியேக சட்டவரைபுகளும் விதிமுறைகளும் கையாளப்பட வேண்டியது அவசியம் 

Published By: Priyatharshan

05 Jun, 2018 | 09:34 AM
image

(இரோஷா வேலு)

அரசியல் யாப்பின் கீழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமை என்ற சட்ட மூலத்திற்குட்பட்ட சமூக ஊடகங்களுக்கு பிரத்தியேக சட்டவரைபுகளும் சில விதிமுறைகளும் அவசியம் கொண்டுவரப்படல் வேண்டும் என இந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் ஜஸ்டி செலமேஸ்வர் தெரிவித்தார். 

‘சமூக ஊடகங்களுக்கு ஓர் கட்டுப்பாடு வேண்டுமா? ஒரு உலகளாவிய பார்வை’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் நேற்று கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, 

ஜனநாயக அரசியல் கோட்பாடுகளுட னேயே இன்றைய உலகின் பெரும்பாலான நாடுகள் காணப்படுகின்றன. அந்த வகையில் அரசியல் யாப்பின் கீழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமை என்ற சட்ட மூலத்திற்குட்பட்ட வகையில் சமூக ஊடகங்களின் பயன்பாடு காணப் படுகின்றது. ஆனால் சமூக ஊடகங்கள் தவறான கைகளின் பயன்பாட்டின் கீழ் வரும் வேளையில் அவை தவறாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவற்றை கட்டுப்படுத்த விசேட சட்டவரைபுகளும் விதிமுறைகளும் நடை முறைப்படுத்தப்படல் வேண்டும். 

உலகில் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக வேண்டியது எல்லாம் பேசிவிட முடியாது. பேச்சு சுதந்திரமும் பொது நலன் கருதி சில சந்தர்ப்பங்களில் மட்டுப்படுத்தப்படும். அதேபோன்று சமூக ஊடகங்களிலும் சில மட்டுப்பாடுகள் கொண்டுவருவது எதிர்கால டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட உலகிற்கு உகந்ததாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா கருத்து தெரிவிக் கையில், 

சமூக வலைத்தளங்களில் பரிமாறும் தகவல்கள் சர்வதேச ரீதியில் பல பில்லியனுக்கு விற்பனை செய்யப்ப டுகின்றன. தொடர்பு தகவல்கள், மின்ன ஞ்சல் முகவரிகள் மற்றும் தனியார் தகவல்களில் சேகரிக்கப்பட்ட தரவுகள் தொகுப்புக்களின் பெறுமதி பல மில்லி யனை தாண்டுகின்றது.

நாட்டில் இன்று பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்களை பயன்படுத்து கின்றனர். அதில் பலர் சமூக ஊடகம் என்றால் என்ன என்று அறியாமலே பயனாளர்களாக இருக்கிறார்கர்கள். இவர் களை பொறுத்த வரையில் கணனி, தொலைபேசி, இணையம் போன்றவற்றின் பயன்பாடே சமூக ஊடகங்களில் தாமும் செல்வாக்கு செலுத்துகின்றோம் என்ற எண்ணப்போக்கை வழங்கியுள்ளது. 

இந்த எண்ணப்போக்கானது முற்றிலும் தவறாகும். சமூக ஊடகம் என்பது தனியார் தொடர்பு சாதனமாகும். ஆனால் இன்றைய உலகில் அது பலரின் கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்படுகின்றது. சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் எம்மையே வரி செலுத்தாமல் சந்தைப்படுத்துகின்றோம். 

இவ்வாறு பல வழிகளில் பயன்படும் சமூக ஊடகங்களில் ஓர் கட்டுக்கோப்பு காணப்படாமையினால் இன்றைய சர்வதேச சமூகங்களில் உள்ள சில புல்லுருவிகளினால் எமது சொந்த தகவல்கள் சர்வதேச சமூக தளங்களில் பல பில்லியன் பெறுமதிக்கு விற்பனை செய்யப்படுகின்றன. 

அதேபோல் அதன் பயனாளர்கள் தங்களை அறியாமல் பரிமாறும் சில தரவுகள் மற்றும் தேவையற்ற சில குறுந்த கவல்கள் பரிமாற்றம் செய்யும் வேளையில் எமது தொடர்பு இலக்கம் மற்றும் அந்த தகவலை பெறுநரின் தொடர்பு இலக்கம் இரண்டையும் வழங்குகின்றோம். 

இவற்றை பயன்படுத்திக்கொள்ளும் சில புல்லுருவிகளே இவ்வாறு எமது தரவுகளை பல பில்லியன் ரூபாய்க ளுக்கு விற்பனை செய்கின்றனர். இவ்வாறு சமூக ஊடகங்கள் துஷ்பிரயோகத்திற்குள் ளாவதை தடுப்பதற்கு சமூக ஊடகங்கள் தொடர்பில் சில விசேட விதிமுறைகள் கொண்டுவரப்படல் வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் சமூக ஊடகங் கள், சமூக வலைத்தளங்கள் பயனாளிகளை கொண்ட உரிய நாடுகளில் சட்டப்பதிவு செய்யப்படல் கட்டாயமாக்கப்படலும் அவசியமாகும்  என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36