வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள மருந்து களஞ்சியத்தில் நேற்று இரவு 9.15 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த தீ நகரசபையின் தீயணைப்பு படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வவுனியா வைரவப்புளியங்குளம் இராசதுரை வீதியில் அமைந்துள்ள மருந்தகத்தின் உரிமையாளரின் இல்லத்தில் அமைந்துள்ள குறித்த மருந்தக களஞ்சியத்திலேயே திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நகரசபையின் தீயணைப்பு படையினரின் உதவியுடன் வவுனியா பொலிஸாரும் இணைந்து சுமார் 30 நிமிடங்களாக போராடி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

களஞ்சியசாலையில்  ஆயுள்வேத மருந்து தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.