ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று நடைபெற்ற மதத்தலைவர்கள் அமைதி குழு கூட்டத்தை குறிவைத்து நடந்த மனித தற்கொலை குண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுவரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டின் தலைவர்கள் கடும்கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அமைந்துள்ள பல்கலைக்கழகதிற்கு அருகில் இருந்த கூடாரத்தில் சுமார் 3 ஆயிரம்  மதத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று இடம்பெற்றது 

குறித்த நிகழ்வு நிறைவுற்று  அனைவரும் வெளியேறும் வேலையில்  குறித்த தற்கொலை குண்டு தாக்குதல்  இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், சுமார் 12 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையால்  பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.