தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியின் தலவாக்கலை ஹோலிருட் பகுதியில் 25அடி பள்ளதில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வட்டகொடையில் இருந்து தலவாக்கலை  நோக்கி பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த வாகனம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமானது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.