ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என கட்சியின் புதிய பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அதன் ஆரம்பநாட்கள் முதல் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்காக பாடுபடப்போவதாகவும் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விலகவேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள புதிய பொதுச்செயலாளர் கட்சியில் பொதுவான கருத்துடன்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதே எனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து பதில் அளித்துள்ள புதிய பொதுச்செயலாளர் இதற்கான பதில் அளிப்பதற்கான நேரம் இதுவல்ல என குறிப்பிட்;டுள்ளார்.