மனித எலும்புகள் அகழ்வு பணிகளை நேரடியாக சென்று அவதானித்தார் மிராக் ரஹீம் (படங்கள்)

Published By: Digital Desk 4

04 Jun, 2018 | 02:20 PM
image

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று 6 ஆவது நாளாக முன்னெடுக்கப்படு வருகின்ற நிலையில்,மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி மிராக் ரஹீம் மற்றும், குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகிய இருவரும் நேரடியாக  சென்று அவதானித்துள்ளனர்.

-மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று காலை 7.15 மணியளவில் 6 ஆவது நாளாக குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்,கலனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், திருமதி ரணித்தா ஞானராஜ் , விசேட தடயவியல் நிபுனத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்,சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி மிராக் ரஹீம் மற்றும்,குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகிய இருவரும் 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இடம் பெற்று வரும் மனித எலும்புக்கூடு அகழ்வுகளை நேரடியாக அவதானித்ததோடு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளாரும் வருகை தந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி மிராக் ரஹீம் மற்றும், குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகிய இருவரும்  மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்டு அகழ்வுகள் இடம் பெற்று வரும் மண் குவியல்களையும்,அங்கு இடம் பெற்று வருகின்ற அகழ்வுகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08