சுற்றுலா பயணிகளை கவர உலக நாடுகளில் பவவற்றில் பல்வேறு புதிய அமசங்கயை கையாண்டு வருகின்றனர் அந்த வகையில் தனது நாட்டின் வரலாற்றின் கறுப்பு பக்கங்களாக கருதப்படும் சில தருணங்களை ஒரு போர் அருங்காட்சியகம் மூலம் காட்சிப்படுத்த உகாண்டா முடிவெடுத்துள்ளது.

உகாண்டா நாட்டின் முன்னாள் ஜானாதிபதியான இடி அமினின் 8 ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சியிலும், எல்ஆர்ஏ எனப்படும் லோர்ட்ஸ் தடுப்பு படையாலும் நடத்தப்பட்ட துண்புருத்தல்கள் குறித்து இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்த திட்மிட்டுள்ளனர்.

இந்த அருங்காட்சியகம் குறித்து உகாண்டா சுற்றுலா கழகத்தின் தலைவரான ஸ்டீஃபன் அசிம்வி குறிப்பிடுகையில் ''கடந்த காலங்களில் நடந்த தவறுகளை நாங்கள் சீர் செய்ய விரும்புகிறோம்'' என்று தெரிவித்தார்.

இதுவரையில் நிர்மானிக்கப்படாத நிலையில் உள்ள உகாண்டாவின் குறித்த அருங்காட்சியகம் காலனித்துவ மற்றும் காலனித்துவத்துக்கு முந்தைய காலங்களின் வரலாற்றை காட்சிப்படுத்தும் முனைப்பில் உள்ளது.

''இது போன்ற முயற்சிகளால்  காலம் கடந்தும் பழைய நினைவுகளின் பெருமைகளைக் சொல்லும் சிறந்த நினைவகமாக குறித்த அருங்காட்சியகம் அமையும்'' என அசிம்வி மேலும் தெரிவித்துள்ளார்..

''இடி அமினின் ஆட்சிக்காலத்தில் ஒரு சிறுவனாக இருந்த நான், ராணுவத்தின் அடக்குமுறையால் பல நண்பர்கள் மற்றும் மாணவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் பெற்றோரை இழந்ததை கண்டு வருந்தியுள்ளேன்,'' என்று குறிப்பிட்டார்.

''ஆனால், வரலாறு கூறும் விடயங்களில் இருந்து ஒருவர் தப்பிக்க முடியாது. இவை தவிர்க்க முடியாத உண்மைகள்'' என்று அவர் மேலும் குறிபிட்டுள்ளார்..

ஒவ்வொரு இடத்திற்கும், நாட்டிற்கும் வருங்கால சமூகத்துக்கு எடுத்துக்கூறும் விதமாக தனித்துவமான கலாச்சார அம்சங்கள் உண்டு என அசிம்வி கூறியுள்ளார்.

''உகாண்டாவில் மலைவாழ் கொரில்லாக்கள் என வனவிலங்குகள் குறித்து பல வியத்தகு அம்சங்கள் இருந்தாலும், நாட்டின் பழங்காலத்தை மற்றும் நினைவுகளை வெளிக்கொணர்வது இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டாவின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றை காட்சிப்படுத்துவதன் நோக்கம், உகாண்டாவுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை கவர்வதும், சுற்றுலாத்துறைக்கு ஏற்ற இடமாக நாட்டை மாற்றுவதும்தான் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.