கொழும்பு- கெப்படிபொல மாவத்தையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவின் தாயாரின் வீட்டின் இரண்டாம் மாடியிலேயே  தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தீயணைப்பு படையினரால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்று தெரிவித்துள்ள கறுவாத்தோட்ட பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இந்தத் தீ பரவலால் வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.