ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தனி அர­சாங்­கத்தை அமைக்கும் உறு­தி­யான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்பேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு வேலைத்­திட்­டத்தை துரி­தப்­ப­டுத்தும் வகையில் தற்­கா­லி­க­மாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிர்­வா­கக்­குழு ஒன்­றரை மாதமே செயற்­படும். அதன் பின்னர் முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பினை செய்வேன் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழு, அகில இலங்கை செயற்­குழு மற்றும் நிறை­வேற்­றுக்­குழு ஆகிய மூன்றும் ஒரே தட­வையில் நேற்று(03-06-2018) கூடி­யது. கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் மற்றும் கட்­சியின் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. மேலும் தேசிய அர­சாங்­கத்தின் பயணம் குறித்தும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி உறு­தி­யான அர­சியல் பயணம் ஒன்­றினை முன்­னெ­டுப்­பது தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

 மேலும்,  அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மக்கள் ஆத­ரவு குறித்து இன்று பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எதிர்­கொண்ட பின்­ன­டை­வா­னது எம்மை தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற வேண்டும் என்ற வகை­யி­லான மக்­களின் ஆணை­யா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. ஆகவே அதற்­கான தீர்­மா­னங்­களை நாம் முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களின் போது சகல கார­ணி­க­ளையும் கருத்தில் கொண்டு ஆரோக்­கி­ய­மான தீர்­மானம் ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்டும் எனவும், அதில் சகல தரப்­பி­ன­ரதும் ஒத்­து­ழைப்­புகள் வழங்­கப்­பட வேண்டும் எனவும்  ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.