குவாட்டமாலாவிலுள்ள போகோ என்ற என்ற எரிமலை வெடித்ததன் காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பு காரணமாக ஒருபெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல்ரோடியோ என்ற கிராமத்தை தீக்கிரையாக்கியதில் அங்கிருந்த வீடுகளும் அதிலிருந்தவர்களும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் அப் பகுதியிலுள்ள சர்வதேச விமான நிலையமும் இதனால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.

அந் நிலையில் இந்த அனர்த்தம் காரணமாக  உயிரிழந்தவர்ளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந் நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.