கட்­டாரில் தொழில்­பு­ரியும் வெளி­நாட்டுப் பணி­யா­ளர்­க­ளுக்குரித்­தான தொழில் ­சட்­டங்­களில் மாற்­றங்­களைக் கொண்டு வருவதற்கு அந்­நாட்டின் நிர்­வாக அபி­வி­ருத்தித் தொழிலாளர் மற்றும் சமூக நலன்­புரி செயற்பாடுகளுக்கான அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்தத் தீர்­மா­னத்­துக்கமைய அந்­நாட்டு அதி­கா­ரிகள் புதிய சட்­ட­திட்­டங்கள் தயா­ரிக்­கப்­பட வேண்­டிய முறையைப் ­பற்றிக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் அதன்­போது சில முடி­வுகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­துடன் அந்த முடி­வு­களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்­துள்­ள­தா­கவும் அந்­நாட்டு செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அத் தீர்­மா­னங்­க­ளுக்கமைய அந்­நா­டு­களில் பணி­பு­ரியும் பணி­யா­ளர்கள் நாள் ஒன்­றுக்கு பணி­பு­ரிய வேண்­டிய மணித்தியாலங்கள், மருத்­துவ விடு­முறை பெறும் முறை, விடு­முறை தினங்கள் போன்­றவை தொடர்­பிலும் கவனம் செலுத்தியுள்ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

புதிய சட்­டத்­தி­ருத்­தங்­க­ளுக்கமைய பணி­யாளர் ஒருவர் நாள் ஒன்­றுக்கு குறித்த நிறு­வ­னங்­களில் 10 மணித்தியாலங்கள் பணிபுரிய வேண்டும் என்­ப­துடன் கிழ­மையில் ஒருநாள் விடு­முறை பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­துடன் மருத்­துவ விடு­மு­றை­யினை தமது சுக­யீனம் தொடர்­பான உறுதிப்படுத்தலுடன் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 இனி­வரும் காலங்­களில் கட்டார் நாட்­டுக்கு தொழில் நிமித்த­ம் வரும் பணி­யா­ளர்கள் அந்நாட்டின் தொழில் சட்டங்கள் குறித்து கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டுமெனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டின் தொழில் சட்டங்களை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.