கொழும்பில் வேலையற்ற பட்டதாரிகளின் ஆப்பாட்டத்தின்மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலை கண்டித்து இன்று மட்டக்களப்பு நகரில் வேலையற்ற பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன ஊர்வலத்திலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டபேரணி திருமலை வீதி வழியாகச் சென்று மகாத்மா பூங்காவை அடைந்தது.

அங்கு கூடிய வேலையற்ற பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்திலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பல கோசங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்பாட்டக்காரார்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- ஜவ்பர்கான்