வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போவதாக சிரியா ஜனாதிபதி பசார் அல் அசாத் தெரிவித்துள்ளார்.

நான் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டு  அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் அன்னை சந்திக்கப்போகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவிற்கான வடகொரியாவின் புதிய தூதுவரை சந்தித்தவேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடகொரியா ஜனாதிபதியின் மிகத்திறமையான தலைமைத்துவம் காரணமாக கொரிய தீபகற்பத்தில் இடம்பெற்ற சிறந்த விடயங்களை உலகம் வரவேற்கின்றது என சிரியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவர் இறுதி வெற்றிபெறுவார் இரு கொரியாக்களின் இணைப்பை சாத்தியமாக்குவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவிற்கும் சிரியாவிற்கும் இடையில் நல்லுறவுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் இரசாயன ஆயுத உற்பத்தியில் வடகொரியாவிற்கு தொடர்புள்ளதாக ஐநா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் வடகொரியா இதனை நிராகரித்து வந்துள்ளது.

இரு நாடுகளும் சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.