ஏமன் நாட்டில் உள்ள சொகோட்ரா தீவில் ஏற்பட்ட புயலில் சிக்கிய 38 இந்தியர்களை இந்திய கடற்படை இன்று மீட்டுள்ளது. 

அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை கடந்த மாதம் 28-ம் திகதி தாக்கியது மெகுனு புயலில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இவர்களில் 3 பேர் இந்தியர்கள் ஆவர். மேலும் இந்த புயலினால் சொகோட்ரா தீவில் 38 இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது.

அவர்களை மீட்க இந்திய கடற்படைக்கு சொந்தமான சுனைனா என்ற கப்பல் ஏமன் நாட்டுக்கு விரைந்தது. அங்கு புயலில் சிக்கியிருந்த  38 இந்தியர்களை இன்று இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.